வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இயங்கும் இரு விமான நிலையங்களிலிருந்து வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) புறப்படவிருந்த 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமாகப் புறப்பட்டன.
மேலும், நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டததாக அந்நாட்டு மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.
விமானப் போக்குவரத்துக்குத் தொடர்பில்லாத உள்ளூர் தொலைபேசி நிறுவனத்தின் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானப் போக்குவரத்தை மெதுவாக்கியதாக அது கூறியது.
பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அது சொன்னது.
டல்லாசிலிருந்து இயங்கும் 20 விழுக்காட்டு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்வேர் நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கன் ஏர்லைன்சின் 200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் 500க்கும் மேற்பட்ட விமானச்சேவைத் தாமதங்களைச் சந்தித்ததாகவும் அது குறிப்பிட்டது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் 1,100க்கும் மேற்பட்ட விமானங்கள் டல்லாசிலிருந்து தாமதமாகப் புறப்பட்டதாகக் கூறியது.