பசிபிக் பெருங்கடலின் தென் கிழக்கு வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) காலை 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அவ்வாட்டாரத்தில் உள்ள ஃபிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது அதன் பிறகு மீட்டுக்கொள்ளப்பட்டது.
நியூ கலிடோனியா தீவுக்கு 340 கிலோ மீட்டர் தூரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதனால் வனுவாட்டு கரையோரங்களில் ஒன்றிலிருந்து மூன்று மீட்டர் உயரங்களில் சிறிய அளவு சுனாமி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் வனுவாட்டு மக்கள் எந்த ஓர் அச்சமும் இல்லாமல் கடற்கரைகளில் காணப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
நிலநடுக்க அதிர்வுகள் அவ்வட்டார நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
ஆஸ்திரேலியாவில் எந்த அதிர்வுகளும் உணரப்படவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூமியில் நெருப்பு வளையம் ( ரிங் ஆஃப் பையர்) எனப்படும் வட்டாரங்களில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்.