‘இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்’

‘இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்’

1 mins read
0a521cda-50af-4f54-b89e-28cd62b0fc25
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பாதுகாப்பு அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நவம்பர் 28ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

திரு கானின் வழக்கறிஞர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக பொது இடத்தில் அவர் காணப்படவிருக்கிறார்.

அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் விசாரிப்பது சட்டவிரோதமானது என்று இந்த வாரத் தொடக்கத்தில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்