‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டிக்குச் செல்லும் பாகிஸ்தானியப் பெண்

1 mins read
3adacb54-11ed-44bb-9e4c-252ee4beffb5
செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் கராச்சியைச் சேர்ந்த எரிக்கா ராபினுக்கு ‘மிஸ் யுனிவர்ஸ் பாகிஸ்தான்’ எனப் பட்டம் சூட்டப்பட்டது. - படம்: எரிக்கா ராபின் / இன்ஸ்டகிராம்

கராச்சி: துபாயைச் சேர்ந்த யுஜென் குழுமம் ஏற்பாடு செய்த அழகிப் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த எரிக்கா ராபின் ‘மிஸ் யுனிவர்ஸ் பாகிஸ்தான்’ பட்டத்தை வென்றார்.

அந்நிறுவனம் இப்போட்டியை மார்ச் மாதம் அறிவித்தது. முதன்முறையாக நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மாலத்தீவில் செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் கராச்சியைச் சேர்ந்த எரிக்கா ராபினுக்கு ‘மிஸ் யுனிவர்ஸ் பாகிஸ்தான்’ எனப் பட்டம் சூட்டப்பட்டது.

இந்த அழகிப்போட்டியால் அந்நாட்டில் இருக்கும் சமயக் கல்விமான்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அவரது சாதனை பலதரப்பினரால் பாராட்டப்பட்டாலும், சமயக் கல்விமான்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

“அனைத்துலக அரங்கில் முத்திரை பதிக்கும் பாகிஸ்தான் பெண்களைத் தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. பெண்களின் வெற்றிகள் ஏன் நாட்டின் ஒழுக்கத்திற்கு இழுக்காகக் கருதப்படுகின்றன?” என அந்நாட்டு சமூக ஆர்வலர் ஜோஹ்ரா யூசுப் சமயக் கல்விமான்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாண்டு எல் சால்வடாரில் நடைபெறும் அனைத்துலக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பாகிஸ்தானை எரிக்கா பிரதிநிதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்