காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் பாகிஸ்தான் கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
போதைப்பொருள் புழக்கக்கத்திலிருந்து விடுபட நடத்தப்படும் முகாமில் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு 9 மணி வாக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்கள் ஓய்ந்த பிறகு மீட்புப் பணிகள் இரவு 10 மணிவாக்கில் தொடங்கின. அப்போது குறைந்தது 30 சடலங்கள் மீட்கப்பட்டன.
தாக்குதல் சம்பவத்தில் 400க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சு கூறுகிறது. மேலும் 250க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான பூசல் நிலவுகிறது. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மாறிமாறித் தாக்கி வருகின்றன.

