தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணன்-தங்கை பாலியல் உறவு குறித்து கேள்வி; பேராசிரியர் பணிநீக்கம்

1 mins read
38f32540-40c8-4eb5-93e2-c7b4116e9ea2
சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, அந்தப் பேராசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதிரிப்படம் -

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள காம்சேட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், முறையற்ற பாலியல் உறவு குறித்து மாணவர்களிடம் வினா எழுப்பியதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பரில் முதலாமாண்டு மின்பொறியியல் மாணவர்களுக்கான புதிர்ப்போட்டி ஒன்றில், சகோதரனும் சகோதரியும் பாலியல் உறவுகொள்வது தொடர்பில் தாங்கள் நினைப்பது குறித்தும் அதற்கு 300 சொற்களில் விளக்கமளிக்குமாறும் அந்தப் பேராசிரியர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அந்தப் பேராசிரியர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பாகிஸ்தான் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சும் விசாரணை மேற்கொண்டது.

விளைவாக, அந்த வருகைதரு பேராசிரியர் (Visiting Professor) பணிநீக்கம் செய்யப்பட்டார். அக்கல்வி நிலையத்தில் எதிர்காலத்தில் அவரைப் பணியில் அமர்த்தவும் தடை விதிக்கப்பட்டது.