2025ஆம் ஆண்டில் மோசமான காற்றின் தரம் கொண்ட நாடு பாகிஸ்தான்

2025ஆம் ஆண்டில் மோசமான காற்றின் தரம் கொண்ட நாடு பாகிஸ்தான்

2 mins read
2a327294-1a4c-44d9-8964-17373341c2df
பாகிஸ்தானின் காற்றில் கலந்துள்ள அபாயகரமான சிறிய துகள்களின் குறியீடு 2.5ஆகப் பதிவானது. - படம்: ஏஎஃப்பி

புகைமூட்டம் அதிகம் காணப்படும் உலக நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் வந்துள்ளது.

பாகிஸ்தானின் காற்றில் கலந்துள்ள அபாயகரமான சிறிய துகள்களின் குறியீடு 2.5 என காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவனமான ஐகியூஏர் (IQAir) தெரிவித்தது.

அது, உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரநிலையைவிட 13 மடங்கு அதிகம் என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 13 நாடுகளில் காற்றுத் தூய்மைகேடுக் குறியீடு 2.5க்கும் மேல் இருந்ததை அறிக்கை சுட்டியது. 2024ஆம் ஆண்டு ஏழு நாடுகளில் அந்த நிலை இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் ஐகியூஏர் நிறுவனம் கண்காணித்த 143 நாடுகளில் 130 நாடுகளின் காற்றின் தரம், உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளைப் பூர்த்திசெய்யவில்லை.

பாகிஸ்தானுக்கு அடுத்த நிலையில் பங்ளாதே‌ஷ், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் காற்றின் தரம் ஆக மோசமாக இருந்தது. உலக அளவில் உள்ள நகரங்களில் ஆக மோசமான காற்றின் தரத்தைக் கொண்டுள்ளது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லோனி நகர்.

மோசமான காற்றின் தரத்தைக் கொண்டுள்ள இரண்டாம் நகரமாக சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் உள்ள ஹோட்டான் நகர் வந்தது.

மோசமான காற்றைக் கொண்டுள்ள முதல் 25 நகரங்களின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகியவை வந்தன.

உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளைக் கடந்த ஆண்டு 14 விழுக்காட்டு உலக நகரங்கள் மட்டுமே பூர்த்திசெய்தன. 2024ஆம் ஆண்டு 17 விழுக்காட்டு உலக நகரங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளுக்கு உட்பட்டிருந்தன. அதன் தரநிலைகளைக் கடந்த ஆண்டு பூர்த்திசெய்த நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்டோனியா, பனாமா ஆகியவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்