பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்

1 mins read
ece5f709-4884-44bb-94b9-a07759c6f0e5
திரு முஷாரப் தலைமையில் பாகிஸ்தானின் பொருளியல் வேகமாக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஏஃப்பி -

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79.

நீண்ட நாள்களாக திரு முஷாரப் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

1999ஆம் ஆண்டு நவாஸ் ‌ஷெரிப் ஆட்சியைக் கவிழ்த்து பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி அதிபரானார் முஷாரப்.

1943 ஆம் ஆண்டு புதுடில்லியில் பிறந்த முஷாரப் தமது நான்கு வயதில் பாகிஸ்தானுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தார்.

பின்னர் 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.

திரு முஷாரப் தலைமையில் பாகிஸ்தானின் பொருளியல் வேகமாக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த திரு முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார்.