ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்

1 mins read
3f69792f-36cd-4672-9572-507edafe1dcc
பாகிஸ்தான் தாக்குதல்களில் கொல்லப்பட்டோரைப் புதைக்கும் ஆப்கானிஸ்தானிய மக்கள். - படம்: ஏஎஃப்பி

கராச்சி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் மீது தாங்கள் ஆகாயத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட இடங்களில் பலர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமுற்றதாகவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. அவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று ஆப்கானிஸ்தான் கூறியது.

ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள்தான் அண்மையில் நடந்த பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் அவற்றில் அடங்கும்.

பாகிஸ்தானின் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பதற்றம் பெரிய அளவில் அதிகரித்துள்ளதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா சமரசம் செய்து வரையப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் மூன்று பாகிஸ்தானிய ராணுவ வீரர்களை காபூல் விடுவித்தது. அதற்கு சில நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

அண்மையில் நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு காரணம் என்றும் அந்த அமைப்பினர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலைவர்கள் உள்ளிட்டோரின் உத்தரவில் அச்செயல்களில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தானிய அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. பிப்ரவரி 21ஆம் தேதியைக் கொண்டிருந்த அந்த அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) வெளியிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏழு பயங்கரவாத முகாம்கள், ஐஎஸ் அமைப்பின் ‘கொரசான் பிராவின்ஸ்’ (Khorasan Province) ஆகியவற்றின் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்