மிலான்: இஸ்ரேலியத் தாக்குதலில் ஒன்பது சகோதரர்களை இழந்த 11 வயது பாலஸ்தீனச் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற இத்தாலி சென்றடைந்துள்ளார்.
அவர் உட்பட 17 பாலஸ்தீனச் சிறுவர்கள் சிகிச்கைக்காக இத்தாலி சென்றுள்ளனர். அவர்களுடன் 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இத்தாலி சென்றுள்ளனர்.
ஆதாம் அல்-நஜார் எனும் அந்தச் சிறுவனுக்கு உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் தனது தாயுடன் இத்தாலியின் மிலான் நகரில் உள்ள லினாட்டே விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் என்டோனியோ டஜானி, அதாம் அதாமை வரவேற்றார். அதற்குப் பிறகு அல்-நஜார் மிலானில் உள்ள நிகுவார்டா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அதாம் இருந்த விமானத்தில் காயமுற்ற மேலும் ஐந்து பாலஸ்தீன சிறுவர்கள் இருந்தனர். மேலும் 11 சிறார்கள் மற்ற இத்தாலிய விமான நிலையங்களுக்குச் சென்ற விமானங்களில் இருந்தனர்.
கடந்த மே மாதம் 23ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அதாம் மோசமான காயங்களுக்கு ஆளானார். காஸாவில் செயல்பட்டுவரும் ஒருசில மருத்துவ நிலையங்களில் ஒன்றான நாசர் மருத்துவமனையில் அதாமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் தந்தையான ஹம்தி அல்-நஜார் மே 23 தாக்குதலுக்கு ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார். அவர் மருத்துவராகப் பணியாற்றிவந்தார்.