சுற்றுப்பயணியைக் குத்திக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படுபவர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

சுற்றுப்பயணியைக் குத்திக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படுபவர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

1 mins read
33c2ccd8-5c79-4973-aefd-ca12f3d91ff5
கத்திக் குத்து சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பை வலுப்படுத்திய பாரிஸ் காவல்துறை. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஐஃபிள் டவர் அருகே ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவரைக் கத்தியால் குத்திக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதாக டிசம்பர் 6ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.

அவர், தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார்.

டிசம்பர் 2ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிரான்ஸ் விழிப்புநிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பல தனிநபர் தாக்குதல்கள் அந்நாட்டில் நடந்ததாகக் கூறப்பட்டது.

பிரான்சில் அடுத்த ஆண்டு ஜூலையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் வேளையில் பாரிஸ் நகரின் மத்தியப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்