ஜப்பானில் உலகின் ஆகச் சிறிய பூங்கா

1 mins read
2bed12bf-daac-443a-9cec-df61a3c03fd1
மத்திய ஜப்பானின் ஷிஸுவோக்கா பகுதியில் உள்ள இந்தப் பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. - படம்: கின்னஸ் உலகச் சாதனைக் குறிப்பிலிருந்து

தோக்கியோ: ஜப்பானின் ஷிஸுவோக்கா பகுதியில் பூங்கா என அழைக்கப்படும் ஒரு சிறிய பூந்தொட்டி போன்ற பகுதி உலகின் ஆகச் சிறிய பூங்கா என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது. அது அவ்வாறே கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பூங்கா நகைசுமி நகரின் குடியிருப்பாளர் பகுதியில் உள்ளது. இந்தப் பூங்கா சதுர வடிவில் செங்கற்களால், உட்கார வசதியாக, ஒரு சிறிய மேடைபோல் அமைந்துள்ளது. இதில் சில சிறிய செடிகளுடன் அமர்வதற்கு ஒரு சிறிய மேடையும் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரு சிறிய நினைவுச்சின்னங்களும் உள்ளன. அதில் ஒன்றில் நகரின் அடையாளமாக விளங்கும் ஒரு பூவும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது. அத்துடன், இது 30 ஆண்டுகளாக ஓய்வாக அமரும் இடமாகவும் போற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது இது சென்ற டிசம்பர் மாதம் உலகின் ஆகச் சிறிய பூங்காவாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

இதற்கு 300 மீட்டர் தொலைவில் நகர மண்டபம் உள்ளது. இந்தப் பூங்கா சாலைக் கட்டுமானப் பணிகளில் மிஞ்சிய இடமாக பின்னர் பூங்காவாக 1988ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்