புதுடெல்லி: பாகிஸ்தானின் விமானத்துறை அதிகாரிகள் கராச்சி, லாகூர் வான்வெளியின் சில பகுதிகளை மே 1 முதல் மே 31 வரை மூடியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
வான்வெளியின் சில பகுதிகள் இந்த மாதம் முழுவதும் அதிகாலை 4 முதல் காலை 8 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அதிகாரிகள், விமானப் பயணங்கள் மாற்றுப் பாதைகளில் தொடரும் என வலியுறுத்தினர்.
இந்தியாவின் காஷ்மீரில் 26 பேரின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில், வான்வெளி மூடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.