பாஸ் கட்சி: அன்வாருடன் இணைந்து செயல்படமாட்டோம்

பாஸ் கட்சி: அன்வாருடன் இணைந்து செயல்படமாட்டோம்

1 mins read
6b060738-4e32-44ce-a4eb-348e7217a49d
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங். - படம்: பெரித்தா ஹரியான்

குவந்தான்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என்று பாஸ் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது பிரதமர் அன்வாருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆளுங்கட்சியுடன் பாஸ் இணைந்து செயல்படக்கூடும் என்று கடந்த பல மாதங்களாக மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்க இருப்பதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சமயம் தொடர்பான விவகாரங்களுக்குக் குரல் கொடுக்க இருப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

மதுபானம், சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய முழுமூச்சுடன் செயல்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய மக்கள்தொகையில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள்.

அவர்களது ஆதரவைப் பெற ஆளுங்கட்சிக் கூட்டணிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.

“இஸ்லாமிய சமயத்தின் ஷரியா சட்டத்தைக் கட்டிக்காப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும். அதை நடைமுறைப்படுத்த விடாமல் இடையூறு விளைவிக்கக்கூடாது. அதை இழிவுப்படுத்தக்கூடாது,” என்று பாகாங் மாநிலத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வில் பேசிய திரு ஹாடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்