https://www.thestar.com.my/news/nation/2026/05/05/passenger-screening-to-take-just-a-few-seconds-with-myniise-says-saifuddin
கோலாலம்பூர்: மலேசியாவின் அனைத்து எல்லைகளிலும் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பான MyNIISe நடைமுறைக்கு வரஉள்ளது.
இதன் மூலம் பயணிகள் 4 முதல் 5 விநாடிகளில் குடிநுழைவுச் சோதனையை முடிக்க முடியும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தற்போது பயன்பாட்டிலுள்ள ‘MyIMMs’ முறைக்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பம், நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமான அங்கமாக இருக்கும்.
புதிய முறையைக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 5) பரிசோதித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த அமைப்பை ஒரு பெரும் மாற்றம் என்று வர்ணித்தார்.
விமான நிலையங்களின் வருகை, புறப்பாடு பகுதிகளில் நிலவும் நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.
இந்த புதிய அமைப்பு முக அடையாளம், கியூஆர் குறியீடு, கடவுச்சீட்டு ஆகிய மூன்று வழிமுறைகளின் மூலம் பயணிகளை விரைவாகச் சரிபார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் மின்னிலக்க மயமாக்கப்பட்ட, தடையற்ற பயண அனுபவத்தை உறுதிப்படுத்த மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பழைய அமைப்பிலிருந்து புதிய அமைப்புக்கு மாறும் இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சைபுதீன் நிராகரிக்கவில்லை.

