தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவர்கள் போராட்டம்; தவிக்கும் தென்கொரிய மக்கள்

1 mins read
47cae92b-984c-4868-a4b3-d6b6371eb0f8
தென்கொரியாவில் பல மாதங்களாக தொடரும் மருத்துவர்கள் போராட்டத்தால் தென்கொரிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் பல மாதங்களாக தொடரும் மருத்துவர்கள் போராட்டத்தால் தென்கொரிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போராட்டம் காரணமாக அங்குள்ள சில மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதனால் மக்கள் சிறுசிறு மருத்துவ சேவைகளுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

போராட்டம் விரைவில் முடிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மக்களுக்கு மிக முக்கியமான ஒன்று என்றும் கவனிப்பாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாபோராட்டம்