ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டத்துக்கான ஏபிஐ குறியீடு 100ஐத் தாண்டினால் வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ரத்து செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறியீடு 200ஐத் தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் உடனடியாக மூடப்படவேண்டும்.
ஏபிஐ குறியீடு 500ஐத் தாண்டினால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஊழியர்கள் வேலைக்குப் போகத் தேவையிருக்காது.


