மலேசியாவில் ரயில்வே கம்பிகளைத் திருட முயன்றதாக நம்பப்படுபவர் கைது

மலேசியாவில் ரயில்வே கம்பிகளைத் திருட முயன்றதாக நம்பப்படுபவர் கைது

1 mins read
8e82c9be-762b-4236-8d82-e8f208801c7c
இச்சம்பவம் குறித்து கேடிஎம்பி ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. - படங்கள்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்
Google News Preferred Icon

கூலாய்: ஜோகூரில் கெம்பாஸ் பாரு, கூலாய் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கம்பிகளைத் (railway cables) திருட முயன்றதாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்துத் தெரிய வந்ததாக மலேசியாவில் ரயில்களை இயக்கும் நிறுவனமான கெரெட்டாப்பி தானா மெலாயு செண்டரியான் பெர்ஹாத் (கேடிஎம்பி) கூறியது.

“அதனால் சம்பந்தப்பட்ட ரயில்வே பாதையின் 728க்கும் 728.25 கிலோமீட்டர் பகுதிக்கு இடையே கேடிஎம்பி துணைக் காவல் படைகள் சோதனைகளை நடத்த நேரிட்டது.

“அவர்கள் சந்தேக நபரைக் கண்டனர். ரயில்வே பாதைப் பகுதியில் வேலிக்கு அருகே அவர் ரயில்வே கம்பிகளை வெட்டிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது,” என்று கேடிஎம்பி சனிக்கிழமை (பிப்ரவரி 21) ஃபேஸ்புக்கில் அறிக்கை மூலம் தெரிவித்தது. சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்துத் தப்பியோட முயன்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

“சம்பவ இடத்தில் மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில் கம்பிகளை வெட்டும் கருவிகள் இருந்த பைகள் பல இருந்தது தெரிய வந்தது. அந்தப் பைகள் அருகில் இருக்கும் சாக்கடையில் எறியப்பட்டிருந்தன,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்