தனிப்பட்ட தகவல்கள் கசிவு; தென்கொரிய ஜோடி சேர்க்கும் அமைப்புக்கு அபராதம்

தனிப்பட்ட தகவல்கள் கசிவு; தென்கொரிய ஜோடி சேர்க்கும் அமைப்புக்கு அபராதம்

1 mins read
d9bfcf8e-2d23-4f20-9a0f-6a5992f3b28b
தென்கொரியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்று. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து தென்கொரியாவில் ஜோடி சேர்க்கும் அமைப்பு ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தரவுப் பாதுகாப்பு அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தது.

பயனர்களின் உடல் எடை, ரத்த வகை போன்ற தகவல்கள் கசிந்தன.

‘டுவோ’ எனும் நிறுவனத்தின் தரவுக் கட்டமைப்பு 2025ஆம் ஆண்டில் ஊடுருவப்பட்டது. தங்களிடம் பதிவுசெய்துகொண்ட உறுப்பினர்களின் தகவல்கள் இருக்கும் தரவுகளைப் பாதுகாக்க, ‘டுவோ’ போதுமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கவில்லை என்றும் ஊடுருவல் இடம்பெற்ற பிறகு அது துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தென்கொரிய தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை மூலம் தெரிவித்தது.

அதன் காரணமாக, ‘டுவோ’வுக்கு 1.21 பில்லியன் வோன் (1.04 மில்லியன் வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் விதத்தை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தகவல் கசிவுச் சம்பவம் குறித்த முழு விவரங்களை வெளியிடுமாறும் அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடுருவிகள் ‘டுவோ’வின் தரவுகளை ஊடுருவி 420,000 முன்னாள், தற்போதைய உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவிறக்கம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்