மலேசியாவில் பெட்ரோல் விலை சவூதியை விடக் குறைவு: அன்வார்

மலேசியாவில் பெட்ரோல் விலை சவூதியை விடக் குறைவு: அன்வார்

2 mins read
துர்க்மெனிஸ்தானில் மலேசியா எரிவாயு உற்பத்தித் தளம் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும்
a7021bf9-8e56-405b-a5d9-d30bdbed2e21
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அன்வார் பதிலளித்துப் பேசினார். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் எரிபொருள் விலை சவூதி அரேபியாவைவிடக் குறைவாகவே இருக்கும் என்ற தமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மலேசியாவை எண்ணெய் உற்பத்தி செய்யும் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளுடன் மட்டுமே ஒப்பிடவேண்டும் என்று குறிப்பிட்ட அன்வார், தற்போதைய நிலவரப்படி மலேசியாவின் எரிபொருள் விலை அந்த நாடுகளைவிடக் குறைவாகவே உள்ளது என்றார்.

தாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் விலையை 1.50 ரிங்கிட்டாகக் குறைக்குமாறு கோரியபோது, சவூதியில் விலை 50 காசாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போதைய பொருளியல் சூழலில் மலேசியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் (ரோன்95) விலை 1.99 ரிங்கிட்டாக இருக்கும் வேளையில், சவூதி அரேபியாவில் விலை 2.40 ரிங்கிட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது.

கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகிய நாடுகள் அண்மையிலேயே எரிபொருள் விலையை உயர்த்திவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், துர்க்மெனிஸ்தானில் உள்ள முக்கிய எரிவாயுத் தளங்களில் மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகளும் துளையிடும் பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக அன்வார் கூறினார்.

அந்தத் திட்டம், மலேசியாவை உலகின் மிகப்பெரிய எரிசக்திச் சேமிப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக நிலைநிறுத்தும் என்றார் அவர்.

ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட நீண்ட கால டீசல், எண்ணெய் விநியோக உத்தரவாதத்துடன், இத்தகைய விநியோக ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதே மலேசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு உத்தியின் முக்கியத் தூண்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தற்போதைய சூழலில் நாட்டின் பெட்ரோலிய விநியோகம் போதுமானதாக உள்ளது. தேசியப் பொருளியல் செயல்பாட்டு மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி விலையை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பெட்ரோல் விலையைக் மேலும் குறைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வழங்கும் நல்ல ஆலோசனைகளைக் கேட்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்பெட்ரோல்விலைமலேசியாஅன்வார் இப்ராகிம்