மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரும் தாமும் நண்பர்கள் அல்லர் என்றும் அவருடன் தான் பேசுவதில்லை என்றும் அந்நாட்டின் துணை அதிபர் சாரா டுட்டர்டே செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தார்.
திருவாட்டி சாரா டுட்டர்டே. பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் மகள்.
திருவாட்டி டுட்டர்ட்டே எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அதிபர் மார்கோசை அவர் சந்தித்துப் பேசினாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திருவாட்டி டுட்டர்டே, “இல்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை.தொடக்கத்திலிருந்தே நாங்கள் இருவரும் நண்பர்கள் அல்லர். அதிபர் தேர்தலில் சேர்ந்து போட்டியிடுதற்கு முன்பே நாங்கள் பேசிக்கொள்வதில்லை,” என்று கூறினார்.
அதிபர் மார்கோசின் சகோதரி இமீ மார்கோஸ் தமது தோழி என்று திருவாட்டி டுட்டர்டே தெரிவித்தார்.
திருவாட்டி டுட்டர்டே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை திருவாட்டி டுட்டர்டே மறுத்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மார்கோசின் உதவியை நாடவில்லை என்றார் திருவாட்டி டுட்டர்டே.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தைத் தம்மால் சமாளிக்க முடியும் என்றார் அவர்.

