பிலிப்பீன்ஸ் குப்பை நிரப்பு நில விபத்து; உயிரிழப்பு அதிகரிப்பு

1 mins read
8ae5ac4b-7eed-4f1f-ad47-ec2ddbd50ca1
பினாலிவ் குப்பை நிரப்பும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஏஎஃப்பி

சிபு சிட்டி: பிலிப்பீன்சில் குப்பைக் கிடங்கு விபத்தில் நிகழ்ந்த விபத்தில் தேடல், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

10 நாள்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கு சரிந்து கொட்டிய சம்பவத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 36க்கு அதிகரித்துள்ளது. காணாமற்போயிருந்த கடைசி நபர் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) அதிகாலை ஐந்து மணியளவில் கண்டெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தேடல், மீட்புப் பணிகள் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

“பினாலிவ் குப்பைக் கிடங்குப் பகுதியில் நடைபெற் தேடல், மீட்புப் பணிகள் இன்று அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளன,” என்று சிபு சிட்டி நகர மன்றத் தலைவர் டேவிட் டுமுலுக் தெரிவித்தார். அவரே பேரிடர் அபாயக் குறைப்பு, நிர்வாகக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

காணாமற்போயிருந்த கடைசி நபர் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.41 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாண்ட அந்நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பினாலிவ் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36க்கு அதிகரித்துள்ளது. 18 பேர் காயமுற்றனர்.

காயமுற்றோரில் நால்வர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“மீட்கப்பட்ட சடலங்களில் ஆறு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,” என்றார் திரு டுமுலுக்.

குறிப்புச் சொற்கள்
உலகம்விபத்துஉயிரிழப்புமீட்பு