டால்ஃபின் தலையைப்போல இருக்கும் துறைமுகம்

1 mins read
a72b9ef3-c01f-47dc-83a2-a4aaab61f01e
இந்தத் துறைமுகம், பார்ப்பதற்கு பாலூட்டியைப் போலவே இருப்பதைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். படம்: ஃபேஸ்புக் -

பார்ப்பதற்கு டால்ஃபினை போலவே இருக்கும் துறைமுகத்தின் அழகிய புகைப்படத்தைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள அந்தத் துறைமுகத்துக்கு தாம் பலமுறை சென்றிருந்தபோதிலும் தனித்தன்மைவாய்ந்த அதன் வடிவத்தை இதற்கு முன்பு தாம் பார்த்ததில்லை என ரய் ஜோன்ஸ் என்ற அந்தப் புகைப்படக் கலைஞர் கூறினார்.

அந்தத் துறைமுகம், பார்ப்பதற்கு பாலூட்டியைப் போலவே இருப்பதைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மே மாத தொடக்கத்தில் ஆளில்லா வானூர்தியில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

பார்ப்பதற்கு டால்ஃபினின் தலையைப் போலவே இருக்கும் வகையில், துறைமுகத்தில் மண் விநியோகிக்கப்பட்டுள்ளது.

'விசிட் வேல்ஸ்' எனும் இணையப் பக்கத்தின்படி, அதிகமான டால்ஃபின்கள் கார்டிகன் பே பகுதியில் இருக்கின்றன.

வேல்ஸ் கடலோரப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.