கூகள் நிறுவனத்தின் தாய்நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சையின் 2022ஆம் ஆண்டுக்கான சம்பளம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் ஊதியம் கிட்டத்தட்ட 301 மில்லியன் வெள்ளி.
நிறுவனத்தின் ஆண்டு இறுதி நிதி கணக்கு அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டிருந்தது.
கூகள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியரின் சராசரி ஊதியத்தைவிட அது 800 மடங்கு அதிகம்.
சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் ஏறக்குறைய 218 மில்லியன் வெள்ளி பங்குகள் சார்ந்தது.
கூகள் நிறுவனத்தில் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கூகள் நிறுவனம் கிட்டத்தட்ட 12,000 ஊழியர்களை ஆள்குறைப்பு செய்தது.