தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வெயிலிலும் தொடரும் ஹஜ் யாத்திரை

1 mins read
1f7453f6-b538-4f39-81c8-4760b0047eb8
மெக்கா நகரக்கு அருகே நிழற்குடை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான குளிர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, - படம்: ஏஎஃப்பி

மெக்கா: ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஹஜ் புனித யாத்திரையில் இம்முறை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடுமையான வெயில் என்பதால் புனிதப் பயணம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்து வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாகப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்த வாரம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூன் 4ஆம் தேதி ஹஜ் யாத்திரை அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது.

மே 30ஆம் தேதி வரையிலான தரவுகள்படி இதுவரை சவூதி அரேபியாவுக்கு 1.3 மில்லியன் யாத்திரிகர்கள் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கடும் வெயில் காரணமாக மாண்டனர். மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாக யாத்திரை மேற்கொண்டவர்கள்.

கடந்த ஆண்டுபோல் தவறு நடக்காமல் இருக்க சவூதி அரசாங்கம் 40க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து 250,000க்கும் அதிகமான அதிகாரிகளைக் களமிறக்கியுள்ளது.

மேலும் நிழற்குடை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான குளிர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்