விமானத்தின் கண்ணாடியை மோதி உடைத்த பெரிய பறவை; விமானி முகத்தில் ரத்தம்

1 mins read
cf5bdf5d-9d9f-4ab6-a5c5-0322df37e81e
படம்: டுவிட்டர் -

விமானி ஒருவர் நெருக்கடியான சூழலில் எந்த பதற்றமும் இல்லாமல் தெளிவாக செயல்பட்டதால் விமான விபத்தை தவிர்த்துள்ளார்.

எக்வடாரைச் சேர்ந்த ஏரியல் வலின்டே என்னும் விமானி, விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் முன்பக்கத்தில் உள்ள கண்ணாடியில் பெரிய பறவை ஒன்று மோதியது.

பறவை பெரிய அளவில் இருந்ததால் கண்ணாடியும் உடைந்தது. பறவையின் கால்கள் விமானியின் முகத்திற்கு முன் நின்றன.

விமானியின் முகம், கண்களில் ரத்தம் வழிந்தது. வலின்டே எந்த பதற்றமும் இல்லாமல் பொறுமையாக செயல்பட்டு விமானத்தை அவசரமாகத் தரையிறக்கம் செய்தார்.

அது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின்போது விமானியின் முகத்தில் இருந்தது அவரின் ரத்தமா அல்லது பறவையின் ரத்தமா என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

விமானியின் சாமர்த்தியத்தைக் கண்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

காணொளி பார்க்கத் திகில் படம் போல் இருந்ததாகவும் இணையவாசிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்