தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கட்சியின் இரண்டாவது ஆகப்பெரும் பதவியைக் குறிவைக்கும் இருவர்

மக்கள் நீதிக் கட்சியின் உட்தேர்தலில் இருவருக்கு இடையே வலுக்கும் போட்டி

2 mins read
e6911aa9-2ae7-41a8-9e09-45fd30a533eb
மலேசியாவின் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி (இடது), மக்கள் நீதிக் கட்சியின் துணைத்தலைவர் நுருல் இஸா அன்வார் ஆகியோர் தனித்தனியே தேசிய பயணங்களை மேற்கொண்டு அடித்தள ஆதரவாளர்களைத் திரட்டி வருகின்றனர். - படம்: பெர்னாமா

கெஅடிலான் ராக்யாட் எனப்படும் மக்கள் நீதிக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்மை, தொடர்ந்து அதன் தலைவராக இருக்கும்படி கட்சியினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இருந்தபோதும், மே 23ஆம் தேதி நடைபெறவுள்ள உட்கட்சித் தேர்தலில் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி, கட்சியின் துணைத்தலைவர் நுருல் இஸா அன்வார் ஆகியோர் தனித்தனியாக தேசிய அளவிலான பயணங்களை மேற்கொண்டு அடித்தள ஆதரவைத் திரட்ட முற்படுகின்றனர்.

‘ஜெலஜா ஹிருக்’ (சத்தமிகு சுற்றுலா) என்ற பயணத்தின்மூலம் தமது துணைத்தலைவர் பதவியைத் தற்காக்க ரஃபிஸி ரம்லி, 47, முற்படுகிறார்.

சாபா, சராவாக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களுடன் உரையாடி பதவியிலிருந்துகொண்டே மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாகக் கூறினார்.

மக்கள் நீதிக் கட்சி, தனது சீர்திருத்த வாக்குறுதிகளைக் கைவிட்டதாகக் கட்சியினர் பலர் கூறிவரும் நேரத்தில் சீர்திருத்ததிற்கு கட்சி உறுப்பினர் ஈர்க்க முற்படுவதாகத் திரு ரஃபிஸி கூறினார்.

“இந்தப் போட்டி, கட்சியின் ஆன்மாவைப் பாதுகாப்பது பற்றியது. முடிவு எதுவாக இருந்தாலும், கட்சியின் தழைப்பு குறித்த நெடுங்காலக் கண்ணோட்டத்தின் தழுவுதலுக்கு நான் குரல்கொடுப்பதாக நினைக்கிறேன்,” என்று ஈப்போ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய திரு ரஃபிஸி கூறினார்.

மற்றொரு பக்கமாக, மலேசியாவின் ஏழு பகுதிகளில் டமாய் (அமைதி) பயணம் ஒன்றை மேற்கொண்டு மீண்டும் அரசியல் முன்னணிக்கு வர திரு அன்வாரின் மகளான 44 வயது திருவாட்டி நுருல் இஸா முயல்கிறார்.

கட்சியின் ஏழு துணைத்தலைவர்களில் ஒருவரான திருவாட்டி நுருல் இஸா, நிதி அமைச்சருக்கு ஆலோசனை நல்கும் செயலகம் ஒன்றுக்கும் அண்மைய காலம் வரை இணைத்தலைவராக இருந்தார்.

திரு அன்வாருக்கும் திரு ரஃபிஸிக்கும் இடையே சலசலப்பு நிலவி வரும் நேரத்தில் கட்சியின் இரண்டாவது ஆகப் பெரும் பதவிக்காக திருவாட்டி நுருல் திடீரென போட்டியிடுகிறார்.

எங்களுக்குள் போட்டியிடுவதற்கு நேரமே இல்லை. இன விவகாரங்களைப் பற்றி சண்டையிட்டு நாட்டை அழிக்க எண்ணுவோருக்கு எதிராகப் போரிட வேண்டும் என்று கோலாலம்பூரில் திருவாட்டி நுருல் உரையாற்றியபோது மக்களின் உற்சாகக் கூவலைப் பெற்றார்.

இரண்டு வேட்பாளர்களுமே வலுவானவர்கள் என்றாலும் அடித்தள நிலையில் காற்று திருவாட்டி நுருலின் பக்கம் அடிப்பது போன்று இருப்பதாக யுடிஎம் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த டாக்டர் மஸ்லான் அலி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்