தீயணைப்பு வண்டிமீது விமானம் மோதல்; விமானிகள் இருவர் மரணம்

தீயணைப்பு வண்டிமீது விமானம் மோதல்; விமானிகள் இருவர் மரணம்

1 mins read
நியூயார்க் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
bde65ee7-4c50-4de3-b73f-49870215caa0
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின்மீது ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதியது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தரையிறங்கியபோது கீழே நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின்மீது மோதியதில் அதன் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்

இதனால், நியூயார்க்கின் லாகார்டடியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) இரவு 11.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது. அந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஊழியர் நால்வர் உட்பட 76 பேர் இருந்தனர்.

விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதையில் நேர்ந்த இவ்விபத்தில் பலர் காயமுற்றதாக என்பிசி செய்தி தெரிவித்தது.

தீயணைப்பு வாகனத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர்க்கும் இன்னோர் அதிகாரிக்கும் எலும்புமுறிவு ஏற்பட்டதாக முதலில் வெளியான தகவல்கள் கூறின.

மான்ட்ரியலில் இருந்து புறப்பட்ட அவ்விமானம் 39 கிலோமீட்டர் வேகத்தில் தீயணைப்பு வாகனத்தின்மீது மோதியதாக ‘ஃபிளைட்ரேடார்24’ தரவு கூறுகிறது.

விமானம் சற்று மேல்நோக்கிச் சாய்ந்திருந்ததையும் அதன் முன்பகுதி குறிப்பிடத்தக்க அளவு சேதமுற்று இருந்ததையும் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட படங்கள் காட்டின.

இதனையடுத்து, இரவு 2 மணிவரை நியூயார்க் லாகார்டியா விமான நிலையம் மூடப்பட்டது. 18 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன அல்லது புறப்பட்ட இடங்களுக்கே திரும்பிச் சென்றன என்று ‘ஃபிளைட்ரேடார்’ தெரிவித்தது.

விபத்திற்குள்ளான ஏர் கனடா விமானத்தை அதன் வட்டாரப் பங்காளியான ஜாஸ் இயக்கியது.

லாகார்டியா விமான நிலையம் 2025ஆம் ஆண்டில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளுக்குச் சேவை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்