தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்; ஏழு பேர் மரணம்

1 mins read
57f9c7fd-ca9c-4654-9694-f1999f62d1a6
காயமடைந்தோரை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டெகுசிகால்பா: ஹோண்டுராஸ் கடற்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் மாண்டனர்.

ரோட்டன் தீவிலிருந்து புறப்பட்டுச் சென்ற சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்ததாக ஹோண்டுராஸ் தீயணைப்புப்படை திங்கட்கிழமை (மார்ச் 17) இரவு கூறியது.

எட்டு பயணிகள் இன்னும் விமானத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று தீயணைப்புப் படைத் தலைவர் வில்மர் குவரேரோ தெரிவித்தார்.

விமானம் கடலில் விழுந்ததால் மீட்புப் பணி சவால்மிக்கதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த விமானத்தில் 17 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் விமானச் சிப்பந்திகள் மூவர் அடங்குவர்.

விமானப் பயணிகளில் ஓர் அமெரிக்கர், ஒரு பிரெஞ்சுக்காரர், இரண்டு சிறுவர்கள் ஆகியோர் அடங்குவர்.

ஹோண்டுராசில் உள்ள லா செய்பா விமான நிலையத்தை நோக்கி விமானம் புறப்பட்டபோது அது விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்