தொண்டையிலிருந்து பிளாஸ்டிக் குவளை நீக்கம்; சுதந்திரமாக பறக்கத் தொடங்கிய நாரை

1 mins read
f2527574-061f-4b98-86b9-66d567b54c6c
பிளாஸ்டிக் குவளை தொண்டையில் சிக்கிக்கொண்டதால், நாரையால் இரை உண்ண முடியவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

ரியோ டி ஜெனிரோ: தனது தொண்டையில் பிளாஸ்டிக் குவளை ஒன்று சிக்கிக்கொண்டதால் தவித்து வந்த நாரை ஒன்று, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் திங்கட்கிழ்மை (டிசம்பர் 16) மீண்டும் சுதந்திரமாக பறக்கத் தொடங்கியது.

அந்த நாரையின் உயிரைக் காப்பாற்ற கால்நடை மருத்துவர்கள் அவசர அவசரமாகச் செயல்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் குவளை தொண்டையில் சிக்கிக்கொண்டதால், அந்த நாரையால் இரை உண்ண முடியவில்லை என்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிடில் சில நாள்களில் அது மடிந்திருக்கும் என்றும் கால்நடை மருத்துவர் ஜெஃபர்சன் பிரேஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்