பங்ளாதே‌ஷில் நச்சுவாயுக் கசிவு; எட்டுப் பேர் மரணம்

பங்ளாதே‌ஷில் நச்சுவாயுக் கசிவு; எட்டுப் பேர் மரணம்

1 mins read
96ea3652-c98c-4256-b04b-1cf4bcae96bb
மாண்டோரின் உறவினர் கதறி அழுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சிட்டாகோங்: பங்ளாதே‌ஷில் பழைய கப்பல்கள் கழற்றப்படும் ஆலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஐவரை இன்னும் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் பங்ளாதே‌ஷின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரான சிட்டாகோங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) நிகழ்ந்தது.

அங்கிருந்து மக்கள் அலறும் சத்தம் கேட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். பிறகு ஊழியர்கள் பாதிக்கப்பட்ட சிலரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

எட்டுப் பேர் மாண்டுவிட்டதாகவும் காணாமற்போன ஊழியர்களை அதிகாரிகள் தேடிவருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி அப்துல் குடுஸ் செளத்ரி தெரிவித்தார். விசாரணை மேற்கொள்ளக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஃபெர்டாவுஸ் ஸ்டீல் ‌ஷிப்பிரேக்கிங் யாட் அண்ட் ரிசைக்ளிங் ஃபேக்டரி (Ferdous Steel Shipbreaking Yard and Recycling Factory) எனும் ஆலை, சம்பந்தப்பட்ட கப்பலை முன்னதாகத் தனக்குக்கீழ் கொண்டுவந்தது. அக்கப்பல் திரவியமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டது.

அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஒன்றாக அங்கீகாரம் பெற்றிருந்ததோடு அது விதிமுறைகளைப் பின்பற்றும் ஆலை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் திரு சொளத்ரி கூறினார். ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டதுபோல் தெரிந்ததாகத் தீயணைப்புச் சேவை அதிகாரி டெளஃபிக்குல் இஸ்லாம் புய்யான் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்