தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னி ரயில் நிலையத்தில் கோலா கரடியைத் துரத்திய காவல்துறை

1 mins read
72dea783-3d33-4035-97ea-0fc09333f3f6
கோலா கரடியைப் பாதுகாக்க காவல்துறை அதிகாரிகள் பாடுபட்டனர். மெதுவாகச் செல்லும்படி அந்த நிலையத்துக்கு அருகில் இருந்த ரயில்களை இயக்கியவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. - படம்: நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்துச் சேவை/ஃபேஸ்புக்

சிட்னி: சிட்னியின் வனப்பகுதியிலிருந்து ரயில் நிலையத்துக்குள் புகுந்த கோலா கரடியை ஆஸ்திரேலியக் காவல்துறையினர் துரத்துவதைக் காட்டும் காணொளி அக்டோபர் 8ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

கோலா கரடியைக் கண்டு ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

கோலா கரடியைப் பாதுகாக்க காவல்துறை அதிகாரிகள் பாடுபட்டனர்.

சிட்னியின் மத்திய வர்த்தக வட்டாரத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கசுலா நிலையத்தில் அந்தக் கோலா கரடி சுற்றித் திரிந்துகொண்டிருந்ததைக் காணொளி காட்டியது.

இந்தச் சம்பவம் அக்டோபர் 4ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

மின்தூக்கியைச் சிறிது நேரம் நோட்டமிட்ட பிறகு, படிக்கட்டுகள் வாயிலாக அது தளமேடை இருக்கும் இடத்துக்கு இறங்கியது.

தளமேடையின் முனையில் அது நடந்துகொண்டிருந்து.

அந்தக் கோலா கரடி தண்டவாளத்தில் விழும் அபாயம் அதிகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மெதுவாகச் செல்லும்படி அந்த நிலையத்துக்கு அருகில் இருந்த ரயில்களை இயக்கியவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் துரத்தியதை அடுத்து, அது வேலியைத் தாண்டி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றது.

அருகிவரும் விலங்கினப் பட்டியலில் கோலா கரடிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்