ஹாங்காங் பிரபலம் அபி சோய், அவரது முன்னாள் கணவர் மற்றும் குடும்பத்தினரால் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
28 வயதான அபியின் உடல் பாகங்கள் சிலவற்றைக் காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர். அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் தை போ என்னும் பகுதியில் அபியின் கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் அதே இடத்தில் தலை மற்றும் எழும்புகள் ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
அபியின் மற்ற உடல்பாகங்கள் குப்பைக் கிடங்குகளில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் மூன்று பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மாண்ட அபிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

