தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயன்படுத்திய ஆணுறைகளை 65 பெண்களுக்கு தபாலில் அனுப்பிய மர்ம நபர்

1 mins read
8d9a3c91-86c9-4ed9-9518-2039a3b02291
படம்: ANDREW OWENS -

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்திய ஆணுறைகளை 65 பெண்களுக்கு தபாலில் அனுப்பியுள்ளார் ஒரு மர்ம நபர்.

அவர் யார் என்பதை அறிய அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்பர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள பெண்களுக்கு அந்த தபால்கள் சென்றுள்ளன.

தபாலில் கையால் எழுதப்பட்ட அருவருப்பான தகவல்களும் இருந்தன.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவும் இது ஒரு பிரிவை குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தபால் கிடைத்த அனைத்து பெண்களும் 1999ஆம் ஆண்டு ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

மார்ச் மாதம் முதல் தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பள்ளியின் ஆவணங்களில் இருந்து பெண்களின் முகவரி திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்