பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பதற்றம்

பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பதற்றம்

1 mins read
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைத் தவிர்க்க செனட்டர் பதுங்கல்
63bec640-1e20-4be8-abc5-aa70ddddb37e
ஆயுதம் ஏந்திய படையினர், புதன்கிழமை (மே 13) நாடாளுமன்றத்தைச் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கினர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மணிலா: பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மே 13) மாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தால் (ஐசிசி) விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த பிலிப்பீன்ஸ் மேலவை உறுப்பினர் ஒருவர் அங்கு அடைக்கலம் புகுந்ததாகத் தெரிகிறது.

அரசாங்கத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் மக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பிலிப்பீன்ஸ் மேலவை செனட்டர் பதவி வகிக்கும் ரோனல்ட் டெலா ரோசா (பாத்தோ) என்பவர் திங்கட்கிழமை (மே 11) முதல் நாடாளுமன்ற வளாகத்தில் பதுங்கியுள்ளார் என்று கூறப்பட்டது.

“அரசாங்கம் இதனைச் செய்யவில்லை, செனட்டர் பாதோவை கைதுசெய்ய எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை,” என்று அதிபர் மார்க்கோஸ் ஜூனியர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். துப்பாக்கிச்சூட்டை யார் நடத்தியது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் ஆட்சியில், டெலா ரோசா காவல்துறைத் தலைவராக இயங்கினார். அந்த நேரத்தில் போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பல வன்முறைக் குற்றங்கள் நடந்தேறின.

அவற்றுக்காக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் டுட்டர்டே விசாரணையை எதிர்கொண்டுவருகிறார்.

அந்த விசாரணைக்கு உதவ டெலா ரோசாவை ஐசிசி நாடுகிறது. அதனிடமிருந்து விலகி ஆறு மாதங்களாக அவர் தலைமறைவாக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கைதுகைதாணைபிலிப்பீன்ஸ்சட்டமன்றம்