தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் ஃபிரான்சிசுக்கு மீண்டும் மூச்சுக் கோளாறு

1 mins read
18be6a8d-e4d9-4dad-8156-19ab2013aae1
ரோமில் உள்ள அகோஸ்டினோ கெமெலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள போப் ஃபிரான்சிஸ் இன்னும் நிமோனியா பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை - கோப்புப் படம்: இபிஏ

வத்திகன்: போப் ஃபிரான்சிசுக்கு மீண்டும் திங்கட்கிழமை பிற்பகல் இரு முறை மூச்சுக் கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வத்திகன் தெரிவித்தது.

போப்பின் நுரையீரலில் உள்ள சளியை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அவர் விழிப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

88 வயதான போப்பாண்டவர் தனது சுவாசத்திற்கு உதவ பிராண வாயுவையும் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளையும் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். 18 நாட்களுக்கு முன்பு நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பிறகு மூன்றாவது முறையாக அவருக்கு தீவிர சுவாசக் கோளாறு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் வாந்தியுடன் சுவாசப் பிரச்சினையைச் சந்தித்தார் என்று வத்திகன் கூறியது.

அப்போது பிராணவாயு சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைத்தது.

இதனால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள், பிராண வாயு சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை அவர் மீண்டும் பாதிக்கப்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி மீண்டும் பொருத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்