உலகத் தலைவர்கள் வன்முறையைக் கைவிட போப் லியோ பிரார்த்தனை

உலகத் தலைவர்கள் வன்முறையைக் கைவிட போப் லியோ பிரார்த்தனை

1 mins read
b424ae24-885d-41c5-a3df-5aa2a066d4ca
போப் லியோ கத்தோலிக்கத் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டாகிவிட்டது. - படம்: ஏஎஃப்பி

போம்பேய்: அனைத்துலகப் பதற்றத்தைத் தணிக்கவும் வெறுப்புணர்வைக் குறைக்கவும் உலகத் தலைவர்களை உந்தும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளதாகப் போப் லியோ கூறியுள்ளார்.

உலக நாடுகளில் உள்ள பல மில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு ஓராண்டாகியுள்ள நிலையில் திரு போப் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஈரான் போரைச் சாடியதை அடுத்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போப் லியோமீது சினங்கொண்டார்.

ஈரான் போரை அடுத்து போப் லியோ, அனைத்துலக அரசாங்கங்கள் வன்முறையைக் கைவிடும்படி பிரார்த்தனைச் செய்யும்படி பக்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ரோமிலிருந்து கிட்டத்தட்ட 245 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போம்பேய் என்ற நகருக்கு நேரில் சென்ற போப் லியோ, இறைவன் அரசாங்கத் தலைவர்களின் இதயங்களைத் தொட ஆரம்பிப்பார் என்று செய்யும் வேண்டுதலில் இணையப்போவதாகச் சொன்னார்.

போப் பட்டத்தை ஏற்ற முதல் அமெரிக்கரான போப் லியோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நேரில் சந்தித்துப் பேசினார்.

அதையடுத்து இருதரப்பு உறவை மேம்படுத்த திரு ரூபியோவும் போப் லியோவும் உறுதிகூறியதாக வத்திகன் பின்னர் அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஆண்டு மே 8ஆம் தேதி முன்னாள் போப் ஃபிரான்சிஸ் காலமானதை அடுத்து 1.4 பில்லியன் உறுப்பினர் கொண்ட அனைத்துலகக் கத்தோலிக்கச் சமூகத்திற்கு, முன்னாள் கார்டினலாக இருந்த ரோபர்ட் பிரெவோஸ்ட், போப் லியோவாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்