டிரம்ப், ஹாரிஸ் ‘உயிரை எதிர்ப்பவர்கள்’: போப் ஃபிரான்சிஸ்

டிரம்ப், ஹாரிஸ் ‘உயிரை எதிர்ப்பவர்கள்’: போப் ஃபிரான்சிஸ்

1 mins read
c692aeef-c0b6-47ca-b631-879ff7cb98c2
போப் ஃபிரான்சிஸ் தமது விமானப் பயணத்தின்போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். - படம்: இபிஏ
Google News Preferred Icon

போப்பின் விமானப் பயணம்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ‘உயிரை எதிர்ப்பவர்கள்’ என்று போப் ஃபிரான்சிஸ் கூறியிருக்கிறார்.

ஆசிய பசிபிக்கிற்கு 12 நாள் பயணம் மேற்கொண்டு ரோம் திரும்பிக்கொண்டிருந்தபோது போப் ஃபிரான்சிஸ் விமானத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. டிரம்ப்பின் குடிநுழைவுக்கு எதிரான கொள்கைகள், திருவாட்டி ஹாரிஸ் கருக்கலைவு உரிமைகளுக்குக் கொடுக்கும் ஆதரவு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

“இருவரும் உயிருக்கு எதிரானவர்கள். ஒருவர் குடியேறிகளைப் புறக்கணிப்பவர். மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்,” என்றார் போப் ஃபிரான்சிஸ்.

குறிப்புச் சொற்கள்