ஜப்பானின் 20 முக்கிய நகர்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் மக்கள்தொகை சரிவு

ஜப்பானின் 20 முக்கிய நகர்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் மக்கள்தொகை சரிவு

1 mins read
7aed90c1-07bf-4720-930a-6fec36f97982
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடந்துசெல்லும் மக்கள். - படம்: புளூம்பெர்க்

தோக்கியோ: ஜப்பானில் குறைந்தது 700,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட 20 பெரிய நகரங்களில் பாதியளவு, 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட மக்கள்தொகை சரிவைச் சந்தித்துள்ளன.

பிறப்பு விகிதம் குறைந்து வருவதே இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) கியோடோ நியூஸ் மேற்கொண்ட பகுப்பாய்வு காட்டுகிறது.

இதற்கு முன்னதாக அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இளையர்களைக் கவர்ந்திழுப்பதில் இந்த நகரங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், 2050ஆம் ஆண்டிற்கான ஒரு மதிப்பீட்டின்படி, மக்கள்தொகை குறையும் நகரங்களின் எண்ணிக்கை 18ஆக உயரும் எனத் தெரிகிறது.

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிட்டாகியுஷு நகரம், ‘ஆர்டினன்ஸ்-டெசிக்னேட்டட்’ நகரங்களில் மிகக் கடுமையான சரிவைப் பதிவு செய்துள்ளது. சமூக நலன், பொதுச் சுகாதாரம் போன்றவற்றில் மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் கொண்ட இந்த நகரத்தின் மக்கள்தொகை, 970,000லிருந்து 910,000ஆக, அதாவது 6.5 விழுக்காடு குறைந்துள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட தற்போதைய நகர முறைமையை இந்தச் சரிவு காரணமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு அந்நாட்டுக் கொள்கை வகுப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்