தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள்தொகை சரிவு: 49 பள்ளிகளை மூடிய தென்கொரியா

1 mins read
4c8e64ac-2c87-4352-83a8-6f9cb0c4d908
மூடப்படும் 49 பள்ளிகளில் 38 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவின் மக்கள்தொகை குறைந்து வருகிறது.

பள்ளி செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதால் நாட்டில் உள்ள 49 பள்ளிகள் மூடப்படுவதாக தென்கொரியக் கல்வி அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தது.

இப்பள்ளிகள் இவ்வாண்டு மூடப்படும் என்று அமைச்சு கூறியது.

மாணவர் பற்றாக்குறை காரணமாகத் தென்கொரியாவில் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் 22 பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 33ஆக அதிகரித்தது.

தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள பள்ளிகள் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கியோங் மாநிலத்தில் ஆறு பள்ளிகள் மூடப்படுகின்றன.

தென்கியோலா மாநிலத்தில் ஆக அதிகமாக பத்து பள்ளிகள் மூடப்படுகின்றன.

மூடப்படும் 49 பள்ளிகளில் 38 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மாணவர் பற்றாக்குறை காரணமாக மூடப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்