நியூசிலாந்தில் கடும் புயலால் மின்தடை; ஆயிரக்கணக்கானோர் அவதி

நியூசிலாந்தில் கடும் புயலால் மின்தடை; ஆயிரக்கணக்கானோர் அவதி

1 mins read
6096107b-a94d-48f9-94f2-955b5b35bf83
நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டன் உள்ளிட்ட பல பகுதிகளைக் கடுமையான புயல் புரட்டிப்போட்டது. - படம்: ஆர்என்சி

நியூசிலாந்து: நியூசிலாந்தின் மத்தியப் பகுதிகளில் கடுமையான புயல் கடந்து சென்றதைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் மின்சாரம் இன்றித் தவிக்கின்றனர். புயல் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

சனிக்கிழமை (ஜூன் 27), தலைநகர் வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் அதிகமான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகப் பவர்கோ நிறுவனம் சொன்னது.

புயலால் கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு, கடுமையான மழையுடன் பலத்த காற்று வீசிய நிலையில் புயல் தற்போது ஓய்ந்துவிட்டதாக நியூசிலாந்தின் தேசிய வானிலை ஆய்வகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

வெலிங்டன் நகரின் சாலைகளில் சிதைவுகள் இருக்கக்கூடும் என்றும் நிலச்சரிவுகள் தொடரக்கூடும் என்றும் அவசரப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்தனர்.

கடுமையான புயலால் வெலிங்டனுக்கு வந்துசெல்லும் கிட்டத்தட்ட 200 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.

வெலிங்டனுக்கு வந்துசெல்லும் 200 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
வெலிங்டனுக்கு வந்துசெல்லும் 200 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. - படம்: ஆர்என்சி

இவ்வாண்டு ஜனவரியில் நிலச்சரிவால் நார்த் ஐலண்டில் ஆறு பேர் மாண்டனர்.

சாலைகளில் வாகனங்கள் கவனத்துடன் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகனங்கள் கவனத்துடன் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: படம்: ஆர்என்சி
குறிப்புச் சொற்கள்