தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 11,000 வீடுகளில் மின்தடை: ஆஸ்திரேலியா

1 mins read
ee259d27-c61f-4043-8f5f-0d78598fd7d6
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லந்து மாநிலக் கரையோரத்தில் நிலநடுக்கத் தாக்கம். - கோப்புப் படம்.

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியை 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் குவின்ஸ்லந்து மாநிலத்தில் குறைந்தது 11,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.

ஐரோப்பிய புவியியல் ஆய்வகம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறியது. குவின்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம் முதலில் 5.7 ரிக்டர் அளவில் இருந்ததாக அது சொன்னது.

எனினும் குவின்ஸ்லந்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று ஆஸ்திரேலிய வானிலை நிலையம் அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

குவின்ஸ்லந்தின் எரிசக்தி விநியோக நிறுவனமான எனெர்ஜெக்ஸ் ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகத்திடம் நிலநடுக்கம் காரணமாக ஏறக்குறைய 11,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னது.

9,000க்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டனர்.

பிரிஸ்பனிலிருந்து வடகிழக்கில் கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் தூரத்தில் கில்கிவியன் புறநகர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்