தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரபோவோ பதவியேற்பு விழா: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

1 mins read
9508f59c-67a2-4b2b-ab39-c410f7f9cdd2
பாதுகாப்புப் பணிகளுக்காகத் தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்தது 100,000 காவல்துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். - படம்: இபிஏ

ஜகார்த்தா: அக்டோபர் 20ஆம் தேதியன்று இந்தோனீசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்க இருக்கிறார்.

துணை அதிபராக தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் ஜிப்ரான் ராக்காபுமிங் ராக்கா பதவி ஏற்கிறார்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிகளுக்காகத் தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்தது 100,000 காவல்துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி வரை அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.

அவர்களில் தூரத்திலிருந்து மிகத் துல்லியமாகத் துப்பாக்கியால் சுடக்கூடிய அதிகாரிகளும் கலவரத் தடுப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று இந்தோனீசிய ராணுவத் தலைவர் அகுஸ் சுபியாந்தோ தெரிவித்தார்.

பதவியேற்பு விழா இந்தோனீசிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும்.

நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை, ஜகார்த்தாவில் உள்ள பிரதான சாலைகள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்