ஓடும் ரயிலுக்கு முன்னால் விழுந்த குழந்தைத் தள்ளுவண்டி: குழந்தை, தந்தை உயிரிழப்பு

1 mins read
92babf63-bf71-4f38-9ed0-05efac982ec1
இரட்டைக் குழந்தைகளில் ஒன்றும், அவர்களின் 40 வயது தந்தையாரும் உயிரிழந்தனர்.  - படம்: பிக்சாபே

சிட்னி: சிட்னியில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்த குழந்தைத் தள்ளுவண்டி ஒன்று, ஓடும் ரயிலுக்கு முன்னால் விழுந்தது.

அந்தச் சம்பவத்தில், குழந்தைகளில் ஒன்றும், அவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் உயிரிழந்தனர்.

மற்றொரு குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது.

சிட்னியின் கார்ல்டன் ரயில்வே நிலையத்தில் உள்ள தண்டவாளத் தடத்தில் குழந்தைத் தள்ளுவண்டு விழுந்ததாகக் காவல்துறை கூறியது.

குழந்தைகளின் பெற்றோர் ரயில் நிலையத் தண்டவாளத்திற்குச் செல்ல மின்தூக்கியை எடுத்தனர். மின்தூக்கியிலிருந்து வெளிவரும்போது, அவர்கள் சற்று நேரத்திற்கு மட்டுமே தள்ளுவண்டியை விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“காற்றினாலோ மற்ற காரணங்களினாலோ தெரியவில்லை, அந்தத் தள்ளுவண்டி ரயில் தடங்களை நோக்கி உடனடியாக நகர்ந்துகொண்டிருந்தது,” என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அதிகாரி பால் டன்ஸ்டன் செய்தியாளர்களிடம் கூறினார்.

காவல்துறை, அவசரச் சேவைகள் ஆகியவை தகவல் தெரிந்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தைச் சென்றடைந்தன.

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றும், அவர்களின் 40 வயது தந்தையாரும் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்