பினாங்கில் மலிவு விலையில் உயர்தர டுரியான்கள்

பினாங்கில் மலிவு விலையில் உயர்தர டுரியான்கள்

1 mins read
847c6c2c-882a-4153-bee2-15f1c80386f8
-

பினாங்கில் உயர் ரக டுரியான்களை சாப்பிடுவதற்கான காலம் கனிந்துவிட்டது.

டுரியான் பிரியர்களிடையே பிரபலமான 'முசாங் கிங்' வகை டுரியான், கிலோவுக்கு 30 ரிங்கிட் முதல் 45 ரிங்கிட் வரை (S$9 முதல் S$13) விற்கப்படுகிறது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு இதன் விலை 80 ரிங்கிட் முதல் 90 ரிங்கிட் வரை இருந்தது.

பொதுவாக பினாங்கில் வளர்க்கப்படாத 'எக்ஸ்ஓ' வகை டுரியான், கிலோவுக்கு 20 ரிங்கிட்டுக்கெல்லாம் விலைபோகிறது.

முன்னதாக அதன் உச்ச பருவத்தில் விலை 80 ரிங்கிட் முதல் 100 ரிங்கிட் வரை சென்றது.

பினாங்கின் டுரியான் அறுவடைக்காலம் பொதுவாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்.

பினாங்கில் விற்கப்படும் பெரும்பாலான டுரியான்கள் பேராக் அல்லது பாகாங் மாநிலங்களிலிருந்து வருகின்றன. இந்த மாநிலங்களிலெயே ஆண்டிறுதியில் டுரியான் அதிகம் அறுவடை செய்யப்படுகிறது.