பெய்ஜிங்: இருநாள்கள் நடந்த சீன அமெரிக்க உச்சமாநாட்டின் முடிவில் கடைசி சில மணி நேரங்களில், சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபரை ஒரு ரகசியமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
வர்த்தகம், தைவான், ஈரான் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு இருபெரும் தலைவர்களும் அங்கு தனிமையில் அரசியல் தவிர்த்து பொதுவாகப் பேசிக்கொண்டனர்.
பொதுமக்களுக்கு வர அனுமதி இல்லாத ‘சொங்னன்ஹாய்’ என்று அழைக்கப்படும் சுவர்களால் மறைக்கப்பட்டத் தோட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸியுடன் உரையாடியபடி அங்குள்ள அரியவகை மரஞ்செடிகொடிகளைப் பார்வையிட்டார்.
பண்டைய காலத்தில் வடிவமைக்கப்பட்ட அத்தோட்டத்தில் தற்போதைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், நாடாளுமன்றம் ஆகியவை உள்ளன.
சில மரங்கள் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருப்பதைக் கண்டு அதிபர் டிரம்ப் ஆச்சரியப்பட்டார். அப்போது அருகே நின்ற நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சில மரங்களைச் சுட்டிக்காட்டினார் சீன அதிபர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்
அரசியல் நிகழ்வுகள் தவிர்க்கப்படும் அந்தத் தோட்டத்தில் ரஷ்ய அதிபர் புட்டின் வருகையளித்ததை சீன அதிபர் குறிப்பிட்டார். வெகு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே அங்கு வந்தாக அதிபர் ஸி திரு டிரம்ப்பிடம் கூறினார்.

