ஈரானை மீண்டும் மிரட்டும் அதிபர் டிரம்ப்

ஈரானை மீண்டும் மிரட்டும் அதிபர் டிரம்ப்

1 mins read
ஈரான் செய்த காரியத்துக்குப் போதிய அளவு தண்டிக்கப்படவில்லை: டிரம்ப்
881730d2-e41a-4cb4-85fe-04c26b514c93
மேற்கு பால்ம்பீச் நகர அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே2) செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஏஎஃப்பி

மேற்கு பால்ம்பீச்: ஈரானுடன் செய்யப்படவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத் தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதனுள் அடங்கும் வார்த்தைகளைத் தாம் முழுமையாகப் படிக்க காத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே 2) தெரிவித்தார்.

இருப்பினும் ஈரான் தவறாக நடந்துகொண்டால் தாக்குதல் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் மிரட்டல் விடுத்தார். மியாமி நகருக்குச் செல்வதற்கு முன்பாக, பால்ம்பீச் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிபர் டிரம்ப் இக்கருத்துகளை வெளியிட்டார்.

அதே நாளில் ஈரானிய ஒப்பந்தம் பற்றி பேசிய ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், அதிபர் டிரம்ப் இதுவரை நிராகரித்துள்ள முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்கள், அமெரிக்கத் தடைகளை அகற்றி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து கப்பல் போக்குவரத்தை மீட்பதற்கானது எனவும் அணுவாயுதத் திட்டம் குறித்து பிறகு பேசப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.

ஈரானிடம் செய்யப்போகும் ஒப்பந்தங்கள் உறுதிசெய்யப்படும் சாத்தியம் இல்லை எனவும் அந்நாடு செய்த காரியத்துக்கு போதிய அளவு தண்டிக்கப்படவில்லை எனவும் சமூக ஊடகத்தில் அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை (மே1) பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்