இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

படம்: ஊடகம்

09 May 2024 - 8:01 pm

1 mins read

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதிக்கும் அக்டோபர் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (மே 9) அறிவித்தது.

இதற்கான அறிவிப்பை ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயகே வெளியிட்டார்.

“அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிபர் தேர்தலை நடத்த வேட்புமனுக்கள் வரவேற்கப்படும்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்