நியூயார்க்: வெள்ளியின் விலை கடந்த பல ஆண்டுகள் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அவுன்ஸ் வெள்ளியின் விலை 50 அமெரிக்க டாலரைக் கடந்தது.
வியாழக்கிழமையன்று (அக்டோபர் 9) ஓர் அவுன்ஸ் வெள்ளியின் விலை 51.24 அமெரிக்க டாலராகப் பதிவாகி உள்ளது.
வெள்ளியின் விலை இவ்வாண்டு 70 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை 50 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது.