சிட்னி: பிரிட்டனின் இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவியான மேகன் இருவரும், தங்களது ஆஸ்திரேலியப் பயணத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று, கடந்த டிசம்பரில் போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்தனர்.
ஐஎஸ் அமைப்பால் தூண்டப்பட்டதாகக் காவல்துறை கூறும் ஒரு தந்தையும் மகனும், 2025ஆம் ஆண்டில் சிட்னியின் புகழ்பெற்ற கடற்கரையில் நடந்த ஒரு யூதத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது பல்லாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும்.
தனது குழந்தைகளைப் பாதுகாக்கும்போது பலமுறை சுடப்பட்டும் உயிர் பிழைத்த 40 வயதான எலான் ஸைஸர் உட்பட பல உயிர் பிழைத்தவர்களிடம் இளவரசர் ஹேரியும் மேகனும் பேசினர்.
“அரசக் குடும்பத்தினரைச் சந்திப்பது ஒரு கௌரவம். அவர்கள் வந்து எங்களைச் சந்திக்க முயற்சி எடுத்திருப்பது மிகவும் அழகானது. இது மிகவும் சிறப்பானது. எங்கள் குரல் கேட்கப்பட்டது போன்ற உணர்வை இது தருகிறது,” என்று திரு ஸைஸர் கூறினார்.
தாக்குதலுக்குப் பிறகு செயல்பட்ட அவசரகாலப் பணியாளர்களையும், தாக்குதல்கள் குறித்த கண்காட்சியைத் திறக்கவிருக்கும் சிட்னி யூத அருங்காட்சியகத்தின் பிரதிநிதிகளையும் அரசத் தம்பதியினர் சந்தித்தனர்.
பொருளியல் ரீதியாகச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடகங்களின் தலையீட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற காரணத்தையும் கூறி, இந்தத் தம்பதியினர் 2020ல் பிரிட்டிஷ் அரசக் குடும்பப் பணிகளிலிருந்து விலகி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.
அவர்கள் கடைசியாக 2018ல் அரசக் குடும்பப் பணிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, சிட்னிக்கு வந்திறங்கிய சில மணி நேரங்களிலேயே மேகனின் முதலாவது கர்ப்பத்தை அறிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கலவையான வரவேற்பு
இந்தப் பயணம், பிரிட்டனின் மன்னர் சார்லஸ் நாட்டின் தலைவராக இருக்கும் ஆஸ்திரேலியாவில், பொதுமக்களிடமிருந்து மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கணிசமான சிறுபான்மையினர் ஆஸ்திரேலியா குடியரசாவதை ஆதரிக்கின்றனர்.

